Advertisment

இன்று முதல் சொமாட்டோவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் உபர் ஈட்ஸ்...

ஆன்லைன் உணவு விற்பனையில் தனது போட்டி நிறுவனமாக இருந்த உபர் ஈட்ஸ் நிறுவனத்தை சொமாட்டோ கையகப்படுத்தியுள்ளது.

Advertisment

zomato aquires uber eats india

உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை பிரிவை சொமாட்டோ வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உபர் ஈட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நேரடி உணவகங்கள், டெலிவரி பார்ட்னர்கள், உபர் ஈட்ஸ் ஆப் வாடிக்கையாளர்கள் என மொத்தமாக சொமாட்டோ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று முதல் இது அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட உபர் ஈட்ஸ் நிறுவனம் 41 நகரங்களின் 26,000 உணவகங்களில் உணவு விற்பனைக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாத இந்நிறுவனம் நீண்ட காலமாக தனது நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சொமட்டோ நிறுவனம் உபர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது.

uber eats zomato
இதையும் படியுங்கள்
Subscribe