உலகம் முழுவதும் 12 கிளைகளுடன், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு,வருடம் ஒன்றிற்கு 3 ஆயிரம் கோடிக்குமேல் வருவாய் ஈட்டுகிறது'சோஹோ' நிறுவனம். அதன்தலைவர் ஸ்ரீதர் வேம்பு.
இவர் தற்போது இந்தியாவின்தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில்இடம்பெற்றுள்ளார். இந்த குழு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல்தலைமையில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாகஸ்ரீதர்வேம்பு, "என்னை தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் (என்.எஸ்.ஏ.பி.) நியமித்ததற்காக ஸ்ரீ அஜித்தோவல் 'ஜி' -க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.தொழில்நுட்பம் சார்ந்த கிராமப்புற வளர்ச்சி என்ற காரணத்திற்காக, நான் இந்தியா திரும்பினேன், இந்த ஆலோசகர் பொறுப்பு தேசத்திற்கு சேவையாற்றுவதற்கான மற்றொரு வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது" எனக் கூறியுள்ளார்.