Advertisment

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு உயர்வு..!

பரக

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதற்கிடையே கரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அனைத்து மாநிலங்களிலும் வேகமாக நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தற்போது ஜிகா வைரஸ் தாக்கம் இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஎஸ் கொசுக்களால் இந்த நோய் தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக கேரளாவில் இதுவரை 37 நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு ஜிகா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு 38 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கேரளாவில்8 பேர் ஜிகா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Advertisment

zika virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe