/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tata-nano.jpg)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் விலை குறைவான நானோ காரை இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிதாக எதுவும் உற்பத்தி செய்யவில்லை என தெரித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாகத்தான் டாடா நிறுவனம் சார்பில், நானோ கார் உற்பத்தியும், விற்பனையும் விரைவில் நிறுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. அப்போது இதற்கு காரணமாக, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் புதிய வாகன விதிமுறையான பி.எஸ்.6 வசதியுடன் நானோ தயாரிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயத்தில் மக்கள் மத்தியிலும் அதிகமான வரவேற்பு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ காரின் உற்பத்தி எதுவும் நடக்கவில்லை எனத் தகவல்கள் வந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)