Advertisment

'ஜீரோ டிகிரி கோல்' வைரலாகும் 10 வயது சிறுவனின் வீடியோ!

கேரளாவில் பத்துவயது சிறுவன் கால்பந்து போட்டியில் அடித்த ஜீரோ டிகிரி கோல் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் டானி. இவர் கால்பந்தாட்ட வீரர். பள்ளிகளில் நடைபெறும் அனைத்து கால்பந்தாட்ட போட்டிகளிலும் கலந்துகொண்டு விளையாடுவார். இவர் தற்போது கேரள கால்பந்து பயிற்சி மையத்தில் கோச்சிங் எடுத்து வருகின்றார்.

Advertisment

இவர் வயநாட்டில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கேரள கிட்ஸ் போட்டியில் மூன்று கோல்களை தொடர்ச்சியாக அடித்து சாதனை புரிந்தார். இந்த போட்டியில் இவர் அடித்த ஜீரோ டிகிரி கோல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த கோலை இந்தியாவின் முன்னாள் கால்பந்தாட்ட கேப்டன்களில் ஒருவரான விஜயன் தன்னுடைய ட்விட்டரில் ட்விட் செய்து பாராட்டி உள்ளார். இதனால் இவரின் புகழ் உலக அளவில் சென்றுள்ளது.

goal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe