YSR party executive give chicken and quarter on the occasion of Dussehra festival

Advertisment

நாடு முழுவதும் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று ஆந்திராவில் தசரா பண்டிகையையொட்டி குவாட்டரும், கோழியும் வழங்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தெற்கு தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் டொட்டி பாபு ஆனந்த், தசரா பண்டிகையைதனது வார்டு மக்களுடன் கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் போது டொட்டி பாபு ஆனந்த், சாலையில் செல்லும் அனைவருக்கும் உயிர் கோழி மற்றும் குவாட்டர் கொடுத்து அனைவருக்கும் தசரா பண்டிகைக்குவாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி தற்போது பேசு பொருளாக மாறிவருகிறது.