roja

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் இருந்தபோது கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஆவார். விமானநிலையத்தில் கத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் ஜெகன்மோகனின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த பலர் நாடகமாடுவதாக விமர்சித்தனர்.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா, எதிர்கட்சி தலைவருக்கு பாதுகாப்பு அளிப்பதைவிட்டு நாடகமாடுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர் என்று தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விமர்சித்தவர்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Advertisment