Advertisment

சோனியா காந்தியுடன் ஒய்.எஸ். ஷர்மிளா சந்திப்பு

YS Sharmila meeting with Sonia Gandhi

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பாட்னா, பெங்களூர் ஆலோசனைக்கூட்டத்திற்குப் பின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

Advertisment

அதேநேரம் தெலுங்கானாவில் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஓய்.எஸ்.ஷர்மிளா நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சித்தலைவரான ஷர்மிளா காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க விருப்பப்பட்டிருப்பதாகத்தகவல்கள் வெளியானநிலையில், தற்பொழுது சோனியாவை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Alliance congress sharmila telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe