Skip to main content

இந்திய நாடளுமன்ற தொலைக்காட்சியின் யூடியூப் கணக்கு முடக்கம்!

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

parliament

 

இந்திய நாடாளுமன்றத்தின், மக்களவை நிகழ்ச்சிகளை லோக்சபா டிவியும், மாநிலங்களவை நிகழ்சிகளை ராஜ்யசபா டிவியும் ஒளிபரப்பி வந்தநிலையில், அண்மையில் இந்த இரண்டு தொலைக்காட்சிகளையும் ஒன்றிணைக்கப்பட்டு ’சன்சாத் டி.வி’ (SANSAD TV) என்ற தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

 

இத்தொலைக்காட்சியில் மக்களவை, மாநிலங்களவை நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பபட்டு வந்தன. இந்நிலையில் சன்சாத் டி.வியின் யூடியூப் கணக்கு , யூடியூப்பின் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது. எந்த வழிகாட்டுதலை மீறியதற்காக அக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

இதற்கிடையே முடக்கப்பட்ட யூடியூப் கணக்கை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அவதூறு பரப்பிய பிரபல யூடியூப் சேனல்'- நஷ்ட ஈடு கேட்கும் மலேசிய தயாரிப்பாளர்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
nn


மலேசியா நாட்டை சேர்ந்தவர்  அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் என பன்முகத்தன்மை கொண்டவர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல ஆயிரம் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையை பாராட்டி மலேசிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ‘மாஸ்டர் கிளாஸ் தொழில் முனைவோர்‘ என்ற விருதும் பெற்றுள்ளார்.

கடின உழைப்பு மூலம் இளம் வயதிலே பல சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ள அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டது. அதில், சமீபத்தில் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக் என்பவருக்கும் அப்துல் மாலிக் அவர்களுக்கும் தொடர்பு உண்டு என்ற அவதூறு செய்தி வெளியானது. உண்மைக்கு புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்ட சில யு.டியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் 18.03.2024 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்து அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் அவர்களின் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, 'அப்துல் மாலிக் மலேசியாவில் புகழ்பெற்ற தொழிலதிபர். அவருடைய நிறுவனங்களில் ஒன்றான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சினிமா தொடர்புடைய பல வர்த்தகம் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழ் படங்களைவை மலேசியாவில் விநியோகம் செய்து வருகிறார். இணை தயாரிப்பாளராக பல தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பல உதவிகளையும் தன்னலம் பார்க்காமல் செய்து வருகிறார். அவருடைய இந்த சேவைகளை பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதை கொடுத்து கெளரவித்துள்ளது.

தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் பல நட்சத்திர கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மலேசியா வரும்போது சினிமா சார்ந்து பல ஆலோசனைகளையும், வழிநடத்துதலையும் அப்துல் மாலிக்கிடம் கேட்பதுண்டு.  இதன் காரணமாக அப்துல் மாலிக்கின் வளர்ச்சியை பிடிக்காத சில விஷமிகள் சமூக வலைத்தளங்களில் அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தீய நோக்கத்துடன் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அதை அடிப்படையாக கொண்டு மேலும் பல யூடியூப் சேனல்கள் செவி வழி செய்தியை உண்மை என்று நம்பி எந்தவித விசாரணை, முன் அனுமதியும் இல்லமால் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

வீடியோ பதிவுகள் அப்துல் மாலிக் நற்பெயரை களங்கப்படுத்தி இருப்பதோடு, மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதை சட்டபூர்வமாக அணுகும் விதமாக பொய் வீடியோ வெளியிட்ட நிறுவனங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனுவும் அளித்துள்ளோம். அந்த புகாரில், அவதூறு வீடியோக்களை நீக்குவதோடு, பொதுவெளியில் அப்துல் மாலிக் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது, இந்திய மதிப்பில் ரூபாய் ஐந்து கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்'' என்றனர்.