Youths throw urine on boy face

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ்தி மாவட்டத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த கிராமத்தில் உள்ள ஒரு இளைஞரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுக்குச் சிறுவன் சென்றபோது, அந்த ஊரைச் சேர்ந்த 4 இளைஞர்கள் சிறுவனின் முகத்தில் சிறுநீரைக் கழித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் சிறுவனை தாக்கிய இளைஞர்கள் அங்கு நடந்த எல்லாவற்றையும் அவர்களது செல்போனிலும் படம்பிடித்துள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த சிறுவன் நடந்தவற்றைப் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். பின்னர் பெற்றோர் இளைஞர்களிடம் செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை நீக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் இளைஞர் மீது புகார் அளித்தனர். ஆனாலும் போலீசாரும் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.

Advertisment

இதனிடையே முகத்தில் சிறுநீர் கழித்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த சிறுவனுக்கு போலீசார் புகாரை ஏற்றுக்கொள்ளாதது மிகுந்த மன உலைச்சலைத் தந்துள்ளது. இதன் காரணமாக சிறுவன் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டர். இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுவன் பெற்றோர் கொடுத்த புகாரை பதிவு செய்ய மறுத்த போலீஸ் அதிகாரியை மாவட்ட எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.