Advertisment

வீடியோவிற்காக அருவியில் குதித்த இளைஞர் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழப்பு

A youth who jumped into a waterfall for a video got trapped in a rock and LOst their live

Advertisment

திருப்பதி அருகே உள்ள அருவியில் குளித்த பொழுது சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை சேர்ந்த சுமந்த்என்ற கல்லூரி மாணவர் தன்னுடன் படிக்கும் திருப்பதியைச் சேர்ந்த மாணவர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்லத்திட்டமிட்டார். அதன்படி கல்லூரி விடுமுறையில் அவர்கள் திருப்பதி அருகே உள்ள தலாகோணா அருவியில் குளிக்கச் சென்றனர். அப்பொழுது சுமந்த்வீடியோ எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அருவியின் மேல் பகுதியிலிருந்து குதித்தார். ஆனால் சில நிமிடங்களாகவே அவர் வெளியே வராததால்நண்பர்கள் அவரை தேடினர். ஆனால் இறுதியில் அவர் பாறையில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் எரவாளிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புக் குழுவினருடன் சேர்ந்து பாறை இடுக்கில் சிக்கிய சுமந்தின் உடலை கைப்பற்றினர்.

வீடியோ எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்அருவியில் குதித்து பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த மாணவர் சுமந்தின் உடலை பார்த்து சக மாணவர்கள் கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police video waterfalls
இதையும் படியுங்கள்
Subscribe