Youth who ate momo while incident Bihar

போட்டி போட்டுக்கொண்டு நண்பர்களுடன் மோமோ சாப்பிட்ட இளைஞர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பீகாரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் உள்ள தெருவோரக்கடை ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து பிபின்குமார் என்ற இளைஞர் மோமோ சாப்பிட்டுள்ளார். அப்பொழுது நண்பர்களுக்கு இடையே யார் அதிகமாக மோமோ சாப்பிடுவது என்ற போட்டி ஏற்பட்டது. அப்பொழுது அளவுக்கு அதிகமாக பிபின்குமார் மோமோவை சாப்பிட்டதால் உடனடியாக சம்பவ இடத்திலேயே மயங்கி துடிதுடித்து விழுந்தார். உடனடியாக அவரது நண்பர்கள் பிபின்குமாரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

மோமோ என்ற உணவானது வேக வைக்கப்படும் டம்ப்ளிங் ரக உணவாகும். ஒருகாலத்தில் நட்சத்திர உணவுகளில் மட்டும் கிடைத்து வந்த மோமோ தற்பொழுது சாலையோர கடைகளிலும் எளிதாகக் கிடைக்கிறது. இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மோமோ சாப்பிட்டதில் இளைஞர் உயிரிழந்தது சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment