இயல்புக்கு மாறாக முக அமைப்பு உடைய ஒருவரை கிராம மக்கள் கடவுளின் அவதாரம் என்று கொண்டாடும் நிகழ்வு உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது. உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் வசித்து வருபவர் மஸ்ரா. இவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளன. இவர் அப்பகுதியில் உள்ள கோயிலில் பணியாற்றி வருகிறார். இவருக்கு முக அமைப்பு இயல்பாக மனிதர்களுக்கு இருப்பதை போன்று இல்லாமல் சற்று பெருத்த நிலையில் காணப்படுகின்றது.

hj

Advertisment

Advertisment

ஆரம்ப கால கட்டத்தில் பல்வேறு முறைகளில் மருத்துவம் பார்த்தும் அது சரியாக போகாத காரணத்தால் அவர் தற்போது மருத்துவம் எதையும் பார்க்காமல் அமைதியாக இருந்து வருகிறார். சாப்பிடுவது சிரமமாக இருந்து வந்தாலும், அதற்காக அவர் கவலைப்படாமல் திரவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில், அந்த பகுதி மக்கள் அவரை உடலில் குறைபாடு உடையவராக நினைக்காமல் அவர் கடவுளின் அவதாரம் என்று கூறி அவரை கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் வழிபடுகிறார்கள். அவரின் புகைப்படமும், மக்கள் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.