கரோனா இரண்டாம் அலை மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்துவருகிறது. இருப்பினும் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். இதன்காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமாநில அரசுகள் எடுத்துவருகின்றன. இதன் ஒருகட்டமாகதமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்து பதிவானது. இதனால் அங்கு பொதுமுடக்கம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றிய இளைஞர் ஒருவருக்குப் போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர். அதன்படி அவருக்கு மாலை மரியாதை செய்து, ஆரத்தி எடுத்துள்ளனர். போலீசாரின் இந்த செயலை வீடியோ எடுத்த ஒருவர் அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரலாகிவருகிறது.