
பெங்களூரில் இளைஞர் ஒருவர் மேம்பாலம் ஒன்றில் நின்று கொண்டு கீழே இருந்த மக்களை நோக்கி பணத்தை வாரித்தூக்கி எறிந்த வீடியோ காட்சிசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பணத்தை வாரி இறைத்த அந்த இளைஞர் கோட்சூட் அணிந்தபடி இருந்தார். அவரது கழுத்தில் சுவரில் மாட்டக்கூடிய கடிகாரம் இருந்தது.
பாலத்தின் இருபுறமும் குவிந்திருந்த மக்கள் மீது கையில் வைத்திருந்த பையில் இருந்த பணத்தை அள்ளி அள்ளி வீசினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. போலீசாரின் முதற்கட்டவிசாரணையில் பணத்தை அள்ளி வீசியவரின் பெயர்அருள் என்பதும் அவர் ஒரு கபடி வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.
Follow Us