காதலர் தினத்தை காதலியுடன் கொண்டாடிக் கொண்டிருந்த கணவரை மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களின் காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதற்காக பூங்காக்களிலும், கடற்கரைகளிலும் காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் கூடும் இடம் அனைத்தும் காதலர்களால் நிரம்பி வழிகின்றது.

Advertisment

இந்நிலையில் காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய கணவரை அவருடைய மனைவி தற்செயலாக பார்த்த சம்பவம் பீகாரில் நடந்தது. இன்று மதியம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் தன் கணவருடன் பைக்கில் வேறு ஒரு பெண் செல்வதை பார்த்த அவருடைய மனைவி அந்த வாகனத்தை ஆட்டோவில் துரத்தி பிடித்துள்ளார். மனைவியை கண்ட அந்த இளைஞர் செய்வதறியாது திகைத்து ரோட்டில் நிற்கவே, அவருடைய மனைவி அவரை வார்த்தைகளால் விளாசியுள்ளார். நிலைமை எல்லை மீறி சென்றதால் அருகில் நின்ற காவலர்கள் தலையிட்டு சமரசம் செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வரைலாகி வருகின்றது.