/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NPIC-201872421340-std_2.jpg)
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர். அதற்காக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானை கைது செய்யப்பட்டு, 2 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்தும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதியில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் மாவட்டம் புல்வாமா பகுதியில் 25 வயது இளைஞர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்க ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)