கர்நாடக மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் ரோகன். இவர் அப்பகுதியில் அழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் உடுப்பி மாவட்டத்தில் நடைபெறும் ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்திற்கு சென்று அங்கே வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக வேலை செய்யும் போது 15 அடி ஆழம் உள்ள போர்வெல் குழியில் விழுந்துள்ளார்.

Advertisment

இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வேலை செய்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் கடுமையான முயற்சிக்கு பிறகு அவரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சற்று அச்சம் அடைய வைத்துள்ளது.