
புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள மணவெளியைச் சேர்ந்த வெங்கசேடன் என்பவரின் மகன் மதன்(22). இவர் நேற்று (17.02.2021) மோட்டார் பைக்கில் வில்லியனூர் ஆரியப்பாளையம் அருகே மெயின்ரோட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் துரத்தி வந்த நான்கு பேருக்கும் மேற்பட்ட கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் துரத்திக்கொண்டு வந்தனர்.
கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மதனை வழிமறித்த மர்ம கும்பல் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதிசெய்துகொண்ட அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த மதன் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)