/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3000.jpg)
புதுச்சேரி, சேதாரப்பட்டு அருகில் உள்ள கரசூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(23). இவர், கூலி தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அருண்குமார் தனது நண்பர் ராகுல் என்பவருடன் சேர்ந்து தமிழக எல்லை பகுதியான கடப்பேரி குப்பத்தில் மது அருந்தியுள்ளார்.
மது போதை அதிகமான நிலையில், அப்பகுதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்சார லைன் கம்பத்தின் மீது யார் வேகமாக ஏறுவதென போட்டி வந்துள்ளது. அந்த போட்டியின் காரணமாக அருண்குமார், மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். இதனைக் கண்ட அங்கிருந்த சிலர், அவரை மீட்டு புதுச்சேரி கதிர் காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, அருண்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)