பெண்ணாக இருந்து ஆணாக மாறிய காவலருக்கு திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலிதா குமாரி. இவர் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் உடம்பில் ஆண் தன்மை இருப்பதை உணர்ந்த அவர் பாலியல் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதற்காக மாநில உள்துறை அமைச்சகத்திடமும் முன் அனுமதி பெற்றார்.

jkl

Advertisment

Advertisment

இதனை தொடர்ந்து லிலதா குமாரி மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையான ஜார்ஜ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மூன்று படிநிலைகளில் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் காவலர் பணிக்கு திரும்பிய அவர் ஆண் காவலராக பணியில் சேர்ந்தார். இதற்கிடையே தற்போது அவருக்கு பெண் பார்க்கப்பட்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. பெண்ணாக இருந்து ஆணாக மாறி, தற்போது ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ள அந்த இளைஞரை அப்பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.