வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு தயாரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் பை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனால் அதிச்சி அடைந்த பயணிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் பையை சோதனை செய்ததில் பையில் வெடிகுண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்ததில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் மங்களூர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பத்தும், அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டாதால், கடந்த ஒருமாதமாக யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரிக்க கற்றதாக தெரிவித்துள்ளார். விமான நிலையத்தை வெடி வைத்து தகர்த்தால் தனக்கு மனநிம்மதி கிடைக்கும் என நினைத்து இவ்வாறு செய்ததாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.