Advertisment

"மணமகள் தேவை' நூதன முறையில் திருமணத்திற்குப் பெண் தேடிய இளைஞர் குவியும் வரன்கள்!

fg

கேரளாவைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். 33 வயதான அவர் கடந்த சில ஆண்டுகளாகத்திருமணத்துக்குப் பெண் தேடியுள்ளார். பல வரன்களைப் பார்த்தும் எந்த வரனும் சரிவராததால் அவர் கடும் விரக்தியில் இருந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மனம் வெதும்பி இருந்த நிலையில், தனது பெயர், தொலைப்பேசி எண்ணை ஒரு அட்டையில் எழுதி வீட்டிற்கு முன் கட்டியுள்ளார். இதனை அவ்வழியாகச் சென்றசிலர் புகைப்படம் எடுத்து வாட்சப் வழியாக மற்றவர்களுக்குப் பரப்பியுள்ளனர். இந்தப் புகைப்படம் சில நாட்களிலேயே கேரளாவில் வைரலானது. நூற்றுக்கணக்கான பெண் வீட்டார்கள் தினந்தோறும் உன்னியின் தொலைப்பேசிக்குப் போன் செய்து ஜாதகம் கேட்டு வருகிறார்கள்.

Advertisment

இதுதொடர்பாக உன்னி கூறியதாவது, " இந்த புகைப்படம் வைரலானதைத்தொடர்ந்து எனக்கு இரவு பகல் பாராது அழைப்பு வருகிறது. கேரளா தாண்டி ஆஸ்திரேலியா, துபாய், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெண் வீட்டார் எண்ணைத்தொடர்பு கொண்டு வருகிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால், சில ஆண்களும் என்னைத்தொடர்புகொண்டு, அண்ணா! உங்களுக்குச் சரிவராத ஜாதகத்தை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்களும் நீண்ட நாட்களாகப் பெண் தேடி வருகிறோம் என்று கூறுகிறார்கள்" எனத்தெரிவித்தார்.

Advertisment

groom married twice
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe