மத்திய பிரதேசத்தின் ஜாபல்பூர் பகுதியை சேர்ந்த 17வயதுடைய மாணவி மாணவி பிங்கி. இவர் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர், தன்னுடைய ஆண் நண்பருடன் கடந்த வாரம் பிஜாபுரி கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் மாணவியை தேடியுள்ளார். இதையடுத்து அவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, போலீசாரும் மாணவியை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாணவியின் சடலம் காட்டுப்பகுதிக்குள் கிடந்ததை போலீசார் கண்டெடுத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/FGHJ.jpg)
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது தான் அந்த மாணவி அவரின் ஆண் நண்பர் ராமன் சிங் சயான் என்பவர் சிக்கினார். இவருடன்தான் மாணவி காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு யாருமில்லாத தனிமையை பயன்படுத்தி கொண்ட ராமன் சிங் சயான் வன்கொடுமை முயற்சியில் இறங்கிய அவர் மாணவியிக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால், மாணவி அதை தடுத்து, மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமன் சிங், மாணவியை கீழே பின்பக்கமாக கீழே தள்ளிவிட்டுள்ளார். கீழே விழுந்த அவர் இங்கிருந்த ஒரு பெரிய கல்லில் பட்டு பலத்த காயமடைந்து, அங்கேயே உயிரிழந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது ஆன் நண்பர் ராமன் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)