
சாலையில் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது காவல்துறை வாகனம் ஒன்று மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் தனஞ்செய் என்ற இளைஞர் கிராமத்தில் சென்று கொண்டிருந்த பொழுது வளைவு பகுதியில் திடீரென எதிரே வந்த போலீஸ் வாகனம் பலமாக மோதி இருசக்கர வாகனத்தை தூக்கி எறிந்தது. இந்த சம்பவத்தில் தூக்கிவீசப்பட்ட இளைஞர் தனஞ்செய் படுகாயமடைந்தார். காரின் உள்ளே இருந்த காவல்துறையினர் இளைஞரை அதே காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்று 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். இந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய அந்த காவல் வாகனம் தேவரகொண்டா டிஎஸ்பியின் வாகனம் என்பது தெரியவந்த நிலையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இவ்விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us