Advertisment

சேர்ந்து வாழ மறுப்பு; மனைவி, மாமியாரை கொடூரமாக கொன்ற இளைஞர்

Youth incident wife, mother-in-law in kottayam

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்(40). இவரது மனைவி சிவபிரியா(30). இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. நிதீஷ் ஒரு அப்பள கம்பெணியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக சிவபிரியா கணவனை பிரிந்து மடவன் துருத்து பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமியார் வீட்டிற்கு சென்ற நிதீஷ், மனைவி சிவபிரியாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் இதற்கு சிவபிரியா மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதமான நிலையில் தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து நிதீஷ் மனைவி சிவபிரியாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

Advertisment

அப்போது இதனைத் தடுக்க வந்த மாமியாரையும் நிதீஷ் வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்பு 4 வயது பெண் குழந்தையை மட்டும் நிதீஷ் கையோடு அழைத்துக் கொண்டு தனது ஊருக்குச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நிதீஷை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kerala police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe