Advertisment

இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய கூடுதல் ஆட்சியர்

youth incident patna additional collector

Advertisment

ஆசிரியர் பணி நியமனத்தைத் தாமதப்படுத்துவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை கூடுதல் ஆட்சியர் கொடூரமாகத் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் பணி நியமனம் தாமதப்படுத்துவதைக் கண்டித்து, பீகார் மாநிலம், தலைநகர் பாட்னாவில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற பாட்னா கூடுதல் ஆட்சியர் கே.கே.சிங், தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைக்க உத்தரவிட்டார். அப்போது, தேசியக் கொடியுடன் படுத்துப் போராட்டம் நடத்திய இளைஞரைக் கூடுதல் ஆட்சியர் கொடூரமாக தாக்கினார்.

இளைஞர் மீது தாக்குதல் நடத்தியத் தொடர்பாக, விசாரணை நடத்த அம்மாநில அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது, தவறு இருந்தால் கூடுதல் ஆட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

Bihar incident patna Youth
இதையும் படியுங்கள்
Subscribe