Skip to main content

சிறுமியை 20 முறை குத்திக் கொடூரமாக் கொலை செய்தது ஏன்? - இளைஞர் பகிர் வாக்குமூலம்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

  youth has given a statement as to why he brutally incident girl by stabbing him 20 times

 

டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது, அவரது பின்னால் வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை மறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 20 முறைக்கு மேல் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த பெண்ணின் தலையில் பெரிய கல்லை தூக்கிப் போட்டு கொடூரமாகக் கொன்றுள்ளார். இதனைப் பக்கத்தில் இருப்பவர்கள் தடுக்க முயலும்போது அவர்களை அந்த இளைஞர் மிரட்டியதால், அவர்களும் ஒதுங்கிப் போயுள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. மேலும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலையானவர் அதே பகுதியில் உள்ள ஜே.ஜே காலனியைச் சேர்ந்தவர் என்றும், கொலை செய்தவர் சாகல் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து சாகலை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவானார். அவரைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில் உ.பியில் புலந்த்சாஹர்  நாகரில் உள்ள தனது அத்தை வீட்டி பதுங்கியிருந்துள்ளார். தனது செல்போனை ஸ்விச் ஆஃப் செய்த சாகல் தனது அத்தை செல்போனில் இருந்து டெல்லியில் உள்ள தனது தந்தைக்கு ஃபோன் செய்துள்ளார். இதனை அறிந்த டெல்லி போலீஸ் உ.பி விரைந்து சென்று சகிலை கைது செய்தது. 

 

இதனைத் தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், “நான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து அந்த பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தேன். ஆனால் அந்த பெண் வேறு சில இளைஞர்களுடன் பேசி பழகி வந்துள்ளார். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இது தொடர்பாக எனக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. மேலும் அந்த பெண் தனது கையில் பிரவீன் என்ற இளைஞரின் பெயரை பச்சை குத்தியுள்ளார். இதுபற்றி கேட்டபோது அவர் சரியான பதில் எதுவும் சொல்லவில்லை. அதோடு மட்டுமில்லாமல் என் காதலையும் உதாசீனப்படுத்தினார். அதனால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கொலை செய்யத் திட்டமிட்டு சம்பவத்தன்று அவரை, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சாகல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்