
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தக்காளி, சின்ன வெங்காயம், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை அதிகரித்து விலை உயர்வாக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் சமையல் எரிவாயு விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதனைகண்டிக்கும் வகையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் தக்காளி, சின்ன வெங்காயம், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை பாடையில் வைத்து மலர் வளையம் வைத்து கண்டனம் தெரிவித்தனர். மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மாநில மத்திய அரசுகளை கண்டித்து பதாகைகளை கொண்டு கண்டனம் தெரிவித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டனர்.
Follow Us