
உறவுக்கார பெண் தன்னைவாட்ஸாப்பில்பிளாக் செய்ததற்காக அவரைஇளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அடுத்துள்ள ஒத்தப்பாலம் கிராமத்தில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் அதே பகுதியைச்சேர்ந்த உறவுக்காரரான பெரோஸ் (25) என்கிறஇளைஞருடன் நட்பாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையேஅண்மையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபத்தில் அந்த இளம்பெண் பெரோஸை வாட்சப் கணக்கில் பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் பெரோஸ் அப்பெண்ணின் வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். பின்னர் தான்மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். இளம்பெண் சத்தமிட்டுக் கூச்சலிட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
சுதாரித்துக் கொண்ட பெரோஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அதன் பிறகு மீட்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் கத்திக் குத்தில் ஈடுபட்ட இளைஞர் பெரோஸை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)