Advertisment

அகாலிதள இளைஞரணி தலைவர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை!

akali dal leader

பஞ்சாப் மாநிலத்தில், அகாலி தளத்தைசேர்ந்த இளைஞரணிதலைவர்விக்ரம்ஜித் சிங் மிதுக்கேரா, பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். முகத்தை மறைத்திருந்த நான்கு பேரை கொண்ட கும்பல் ஒன்று காரிலிருந்தவிக்ரம்ஜித் சிங் மிதுக்கேராவைநோக்கி 15 குண்டுகளை சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பற்றி அறிந்ததும் எஸ்எஸ்பி சதீந்தர் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Advertisment

இந்த கொலை சம்பவம் அப்பகுதியிலுள்ளசிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி பதிவை கொண்டு போலீஸார்குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். பட்டப்பகலில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுபஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

leaders Punjab Youth (2809
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe