Advertisment

வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய இளைஞர் படுகொலை!

வாட்ஸ்அப்பில் தவறுதலாக புகைப்படங்களை அனுப்பிய இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

Whatsapp

ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் பகுதி. இந்தப் பகுதியைச் சேர்ந்த லவ் என்ற இளைஞர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சில புகைப்படங்களை எடுத்துள்ளார். பிறகு அவற்றை மற்றவர்களுக்கு பகிரும்போது, தவறுதலாக வாட்ஸ்அப் குரூப்புகளுக்கும் அனுப்பியுள்ளார்.

Advertisment

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த தினேஷ் என்பவர், லவ்வை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். தினேஷின் வீட்டிற்கு சென்ற லவ் மற்றும் அவரது சகோதரரை தினேஷ் மற்றும் குடும்பத்தினர் இரும்புக் கம்பிகள், செங்கற்கள் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் காயம்பட்ட லவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த லவ்வின் சகோதரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணத்திற்காக லவ் படுகொலை செய்யப்பட்டார் என்பது தெளிவாக தெரியவில்லை. இதில் தொடர்புடைய தினேஷ் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகி உள்ள நிலையில், காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்லப்பட்ட லவ்விற்கு 9 மாத குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

whatsapp killed
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe