Advertisment

ஒரே மேடையில் இரண்டு காதலிகளை திருமணம் செய்த இளைஞர்!

chandhu maurya

Advertisment

சட்டீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தின் விவசாயியும், கூலித்தொழிலாளியுமான 24 வயது சந்துமௌரியா, தனதுஇரண்டு காதலிகளையும், ஒரே நாளில்ஒரே மேடையில்திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் சுமார்500 பேர் முன்னிலையில் நடந்துள்ளது.

சந்துமௌரியா, தந்துடோகாபால் என்ற பகுதியில்வேலை ஒன்றிற்காக செல்லும்போது,சுந்தரி காஷ்யப் என்ற பெண்ணைசந்திக்க, இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இதன்பிறகுஒரு வருடம் கழித்து, ஹசீனா பாகேல்என்ற இன்னொரு பெண், உறவினர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகசந்துவின்கிராமத்திற்கு வந்தபோது, அவர் மீது காதல்கொண்டார்.

ஹசீனா தனது காதலைசந்துமௌரியாவிடம் வெளிப்படுத்தியபோது, தான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிப்பதை சந்துஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் ஹசீனா, தொடர்ந்து சந்துவுடன் தொடர்பில் இருக்க, ஒரு கட்டத்தில் சந்துகாதலித்தஇரு பெண்களும், ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து சந்து மௌரியாவைக் காதலித்துவந்தார்கள்.

Advertisment

இதனைத் தொடர்ந்து ஹசீனா, சந்துவின் வீட்டிற்கே வந்து வாழத்தொடங்யுள்ளார். இதை கேள்விப்பட்ட சுந்தரி காஷ்யப்பும் சந்து வீட்டிற்கு வந்துள்ளார்.மூவரும் திருமணம் செய்யாமலே ஒரே வீட்டில்சேர்ந்துவாழத்தொடங்கியுள்ளனர். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதுபற்றி உறவினர்களும், கிராமத்தினரும் கேள்வி எழுப்பவேதற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்த திருமண நிகழ்வு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Women Love marriage chattishghar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe