Advertisment

திருமணத்தை மீறிய உறவு; சகோதரனைக் கொலை செய்து நாடகமாடிய தங்கை! 

The younger sister who Incident her brother for affair in kerala

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் நெடும்பால் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (55). இவர்கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பக்கவாதம் வந்ததால்பாதிப்படைந்து படுத்த படுக்கையாக இருந்து வந்தார். இவருக்கு நிஷா(50, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சகோதரி இருந்தார். படுத்த படுக்கையான சந்தோஷை ஷீபாகவனித்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், நிஷாவுக்கும் செபாஸ்டின்(49) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும், சந்தோஷுடன் கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், சந்தோஷ் கடந்த 5ஆம் தேதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து நிஷாவும், செபாஸ்டினும் அப்பகுதி மக்களிடம், சந்தோஷ் நோயால் பாதிப்படைந்ததால் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

Advertisment

அதன் பேரில் அங்கு வந்த பொதுமக்கள், சந்தோஷின் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து அவர்கள், புதுக்காடு போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், உயிரிழந்த சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதை அறிந்த செபாஸ்டின் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, உடனடியாக அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இதில் சந்தேகமடைந்த போலீசார், நிஷா, செபாஸ்டின் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், நிஷாவுக்கும், செபாஸ்டினுக்கும் இடையிலான உறவுக்கு சந்தோஷ் இடையூறாக இருப்பதாக அவர்கள் கருதினர். இதனால், அவர்கள் இருவரும், சந்தோஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் பேரில், கடந்த 5ஆம் தேதி நிஷா, செபாஸ்டின் ஆகிய 2 பேரும், படுத்த படுக்கையாக இருந்த சந்தோஷை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன் பின்னர், அவர்கள் அப்பகுதி மக்களிடம், நோயால் பாதித்திருந்த சந்தோஷ் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, கொலை செய்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Investigation incident Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe