A young woman who was carried by a collapsed and died - a video that goes viral

Advertisment

திருமணத்திற்கு சீர்வரிசை தூக்கிச் சென்ற இளம்பெண் ஒருவர்சுருண்டு மயங்கி விழுந்த நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பின் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்னா லூயிஸ். 23 வயதான ஜோஸ்னா உறவினர்களின் திருமணநிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது சீர்வரிசை பொருட்களை எடுத்துக்கொண்டு நடனமாடி வந்த லூயிஸ் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் லூயிசை அருகில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுய நினைவின்றி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜோஸ்னா லூயிஸ் இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. இது தொடர்பாக பிரம்மாபூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.