/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/14_142.jpg)
டெல்லியின் புறநகர் பகுதியான நிகல் விகார் பகுதியில் வசிப்பவர் ஓம்கார்(24). கிராபிக் டிசைனராக இருக்கும் ஓம்காருக்கும், அவருடன் பணி செய்த 30 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இருவரும் 3 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஓம்காருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் காதலி, ஓம்காரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு வயதை காரணம் காட்டி காதலியை ஓம்கார் நிராகரித்துள்ளார்.
இதனால், மனம் உடைந்த அந்த பெண் தன்னை ஏமாற்றிய ஓம்காரை பலிவாங்க முடிவு செய்து, ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்து கூலிப்படையை அமர்த்தியுள்ளார். ஓம்கார் முகத்தில் திரவத்தை(ஆசிட்) ஊற்றி சிதக்க வேண்டும் என்று அவர்களிடம் காதலி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த ஓம்காரை கூலிப்படையினர் வழிமறித்து முகத்தில் திரவத்தை ஊற்ற முயன்றுள்ளனர். ஆனால் அது முடியாமல் போனதால், கையில் வைத்திருந்த கைத்தியை எடுத்து ஓம்காரின் முகத்தில் சரமாரியாக கிழித்து சிதைத்துள்ளனர்.
இதையடுத்து படுகாயமடைந்த ஓம்காரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வத்தனர். பின்னர் ஓம்கார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்பு கூலிப்படையை சேர்ந்த விகாஷ்,பாலி, ஹர்ஷ்,ரோகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஓம்காரின் காதலிதான் இந்த சம்பவத்தை அரங்கேற்றினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓம்காரின் காதலியை கைது விசாரணை நடத்தியபோது, “நிச்சயதார்த்தத்தை நிறுத்துமாறு ஓம்காரிடம் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து நான் எதிர்ப்பு தெரிவித்தால், தன்னுடன் எடுத்துகொண்ட அந்தரங்க படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். அதனால்தான் அவரை பழிவாங்க கூலிப்படையை அமைத்தேன்” எனத்தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)