Advertisment

திருமணம் செய்ய பெற்றோர் மறுப்பு... தூக்கில் தொங்கிய இளைஞர்!

திருமணம் செய்ய தாமதமானதால் இளம் பொறியியல் வல்லுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள எலக்ரானிக் சிட்டியில் பணியாற்றுபவர் நிகில் கவுட். 24 வயதான நிகில் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வீட்டில் உள்ளவர்களை நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்தார். திருமணம் செய்வதற்குரிய வயதை நீ இன்னும் அடையவில்லை என்று கூறி சில ஆண்டுகளாக அவரின் பெற்றோர்கள், நிகிலை பேச்சை முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் தனக்கு கட்டாயம் இந்த ஆண்டு திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

Advertisment

இதனால் வேறு வழியில்லாத பெற்றோர்கள், இந்த மாதம் அக்காவின் திருமணத்தை முடித்தவுடன் உனக்கு பெண் பார்ப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிகிலின் அக்காவுக்கு திருமணம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் கொடுத்த வாக்கின்படி கடந்த சில நாட்களாக அவரின் திருமணத்தை பற்றி எதுவுமே பேசாமல் இருந்ததால் மனம் ஒடிந்த நிலையில் இருந்த நிகில் நேற்று இரவு வீட்டின் அறையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
sucide
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe