Advertisment

“என் காரில் நீ எப்படி கை வைக்கலாம்” - ஈவு இரக்கமின்றி சிறுவனை எட்டி உதைத்த இளைஞர் 

young man who mercilessly kicked boy kerala

என் காரில் நீ எப்படி கை வைக்கலாம் என்று 6 வயது பிஞ்சு சிறுவனை ஈவு இரக்கமின்றிஎட்டி உதைக்கும் இளைஞரின் வீடியோசோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தலச்சேரி எனும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மெயின் ரோடு சாலையில்கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் வெள்ளை நிற கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அந்த சமயத்தில்புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன்அந்தக் கார் மீது சாய்ந்து கொண்டிருந்தான்.

Advertisment

அப்போது, அந்தக் காரை ஓட்டி வந்த இளைஞர் வாகனத்தை விட்டு இறங்கிவுடன்என்னோட கார்ல நீ எப்படிடா கை வைக்கலாம் என்ற பாணியில் அந்தப் பிஞ்சு சிறுவனை ஈவு இரக்கமின்றி அவனது மார்பில் எட்டி உதைத்தார். ஒரு கணம் வலியால் துடித்த அந்தச் சிறுவன்அவர் என்னை ஏன் அடித்தார்?எதற்காக அடித்தார் என்று தெரியாமல்பதற்றத்துடன் அமைதியாக இருந்தார். இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உள்ளூர் வாசிகள், அந்த இளைஞரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம்அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில்தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள்அந்த இளைஞருக்கு எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையடுத்துவெள்ளிக்கிழமையன்றுசிறுவனைத்தாக்கிய இளைஞரை தலச்சேரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்அவர் பொன்னியம்பலத்தைச் சேர்ந்த ஷிஷாத் என்பது தெரிய வந்தது. மேலும் ஷிஷாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுஅவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது குறித்துகேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் “மனிதாபிமானம் என்பது கடைகளில் வாங்கக் கூடிய பொருள் அல்ல. காரில் சாய்ந்ததற்காக ஆறு வயது குழந்தையை அடித்து உதைப்பது எவ்வளவு கொடுமையானது. அந்த நபர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது" என அவர் தெரிவித்தார். சாதாரண காரில் சாய்ந்ததற்காக 6 வயது சிறுவனை எட்டி உதைக்கப்பட்ட சம்பவம்கேரள மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

arrested police boy Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe