ராஜஸ்தானில் மூதாட்டியைக் கொன்று அவரது உடலை இளைஞர் ஒருவர் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம்சாராகாகிராமத்தில் மூதாட்டி ஒருவர்கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் அந்த மூதாட்டியைத்தாக்கிக்கொன்றுள்ளார். பின்பு அந்த மூதாட்டியின் உடலை அந்த இளைஞர் சாப்பிட்டு இருக்கிறார். இதனை அவ்வழியாகச் சென்ற சிலர் பார்த்து உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவஇடத்திற்கு வந்தபோலீசார், அந்த இளைஞரிடம் இருந்து மூதாட்டியின் உடலை மீட்டு அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணைநடத்தியதில், அவர் மும்பையைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர்தாக்கூர்என்பதையும் கண்டுபிடித்தனர். பின்பு அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.