/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siren-ni_54.jpg)
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவரும் நிக்கு குமாரி துபே ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பட்ஜ் எனும் கெஸ்ட் கவுஸ்ஸில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று மாலை 4:30 மணியளவில் ராகேஷ், தனது காதலியான நிக்குவை ரிசப்ஷனில் வைத்து துப்பாக்கியைக் கொண்டு சுட்டார். இதில் நிக்குவின் தொடை பகுதியில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். துப்பாக்கிச் சுடும் சத்தத்தைக் கேட்ட கெஸ்ட் கவுஸ் ஊழியர்கள் அலறியடித்து, படுகாயமடைந்த நிக்குவை பார்த்தனர். அப்போது, திடீரென்று, ராகேஷ் இருந்த அறையில் இருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது.
உடனடியாக ஊழியர்கள், அவரது அறைக்குச்சென்று பார்த்தபோது, ராகேஷ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த நிக்குவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ராகேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராகேஷும், நிக்குவும் ஏழு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த உறவை முறித்துக் கொள்ள நிக்கு விரும்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராகேஷ், நிக்குவை கொலை செய்ய முயற்சி செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us