ஜம்மு காஷ்மீரில் மேடை மீது நடனம் ஆடிக்கொண்டு இருந்த நபர் மேடையிலேயே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பிஷ்னா பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது யோகேஷ் குப்தா என்ற இளைஞர் மேடையில் பெண் கடவுள் பார்வதியின் வேஷமிட்டு நடனமாடி கொண்டிருந்தார். நடனத்தின் ஒரு பகுதியாக மேடையில் அமர்ந்து நடனமாடிய அவர் மீண்டும் ஒரு முறை அமர்ந்து நடனமாடிய போது மயங்கி விழுந்தார்.
நடனத்தின் ஒரு பகுதி என பொதுமக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நிமிடங்கள் கழித்தும் அவர் எழுந்துகொள்ளாததால் சந்தேகமடைந்து சககலைஞர் அவரை எழுப்பி பார்த்த போது அவர் மயக்கமடைந்து இருந்தது தெரிய வந்தது. பின் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் அவர் மாரடைப்பில் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.