Advertisment

மலைத்தேனுக்கு ஆசைப்பட்டு குகையில் சிக்கிய இளைஞர் - வெடி வைத்து பாறைகளைத் தகர்த்து உயிருடன் மீட்பு

nn

Advertisment

மலைத்தேனுக்கு ஆசைப்பட்டு குகையில் விழுந்துசுமார் 46 மணி நேரம் தலைகீழாகத்தொங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீட்கப்பட்டுள்ளார். ஏழுஜெலட்டின்குச்சிகளைப் பயன்படுத்தி, பாறைகளைவெடிவைத்துத்தகர்த்துஅதிகாரிகள் அவரை மீட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம், காமா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபேட்டையைச் சேர்ந்தவர் ராஜு. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம்அந்தப் பகுதியில் உள்ளசிங்கராயபள்ளிவனத்தில் உள்ள மலை ஒன்றின் மீது ஏறி தேன் சேகரிக்க முயன்றார் ராஜு. அப்போதுதேன் கூடு இருந்த குகைக்குள் அவருடையசெல்போன்விழுந்துவிட்டது.அதை எடுக்க முயன்ற ராஜு, தலைகீழாககுகையில் விழுந்து சிக்கிக்கொண்டார். அவரைக் காணாமல் தேடிய குடும்ப உறுப்பினர்கள், காலையில் அவர் குகையில் சிக்கிக்கொண்டிருப்பதை அறிந்துபல்வேறு வகையான மீட்பு முயற்சிகளை எடுத்தனர்.போலீசார், தீயணைப்பு படையினர்ஆகியோரும்அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால்,அவரை மீட்க இயலவில்லை.

இந்நிலையில், ஜேசிபி, ஹிட்டாச்சிபோன்ற இயந்திரங்கள் மூலம் பாறைகளை நகர்த்தி அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் கனமான பாறைகளுக்கு இடையே உள்ள சிறிய குகைக்குள் அவர்சிக்கிக் கொண்டதால்அந்தப் பாறைகளை இயந்திரங்கள் மூலம் நகர்த்த இயலவில்லை. எனவே,வேறு வழியில்லாத நிலையில்,ஏழுஜெலட்டின்குச்சிகளைப் பயன்படுத்தி, பாறைகளை வெடிவைத்துத்தகர்த்துராஜுவை அதிகாரிகள் மாலையில் மீட்டனர். உடனடியாக அவரை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தஆம்புலன்சில்ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ராஜு உயிருடன் மீட்கப்பட்டது, அவருடைய குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rescued telangana Honey
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe