A young man posed for reels standing in peril; The scene of Bhakeer tripping and falling into the waterfall

Advertisment

கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில், காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாகக் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சரத் என்ற இளைஞர் சமூகவலைத்தளத்தில் பதிவிட ரீல்ஸ் செய்வதற்காக அருவியை ஒட்டி இருந்த பாறையில் நின்று கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர் கரைப்பகுதியில் இருந்து அதை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென கால் இடறிஅருவியில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. உடனடியாக மீட்புப் படையினருக்குத்தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சரத்தின் உடலைத்தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.வெள்ளப்பெருக்கு காலங்களில் நீர் நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் பலமுறைஅறிவுறுத்தல் கொடுக்கப்பட்ட நிலையிலும் ரீல்ஸ் எடுப்பது, செல்ஃபிஎடுப்பது போன்ற நடவடிக்கைகளில்ஈடுபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், இளைஞர் ஒருவர் அருவியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.