Young man misbehaves young woman in Bengaluru

பெங்களூரு கொடிகேஹள்ளி பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அந்த பெண் பணியாற்றும் அதே நிறுவனத்தில் திருமணமான இளைஞர் ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கத்தின் போது தனது ஏற்கனவே திருமணமானதை மறைத்து அந்த பெண்ணை காதலிப்பதாகக் கூறியிருக்கிறார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்வதாகக் கூறி அந்த பெண்ணை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பிறகு அந்த பெண் இளைஞரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்திய நிலையில் அதற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் பேசுவதையுமே அவர் நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம் பெண் கொடிகெஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இளைஞரை தேடி வருகின்றனர்.