வீட்டிற்குள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை; இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

 young man misbehaves a woman by keeping her locked inside the house

மத்தியபிரதேச மாநிலம் போபால் டீலா ஜமால்புரா பகுதியில் 32 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சமையல் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் சஜித் என்பவர் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் சஜித்திற்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது.

இந்த நிலையில் சஜிஜ் கடந்த வெள்ளிக்கிழமை அந்த பெண்ணிடம் உன்னை எனது தாய் பார்க்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்திருக்கிறார். அந்த பெண்ணும் ஏற்கனவே சஜித் அறிமுகம் என்பதால், அவரும் நம்பி சஜித்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வீட்டில் உள்ளே யாரும் இருப்பதாக தெரியவில்லை என்று உணர்ந்த அந்த பெண் சந்தேகமடைந்த அந்த வீட்டில் இருந்து வெளியேற முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென வீட்டின் கதவை பூட்டிய சஜித், அந்த பெண்ணிடம் அத்துமிறீ பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் அலறல் சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கதினரை பார்த்து, சஜித் தப்பியோடியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் சஜித் மீது புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சஜித்தை தேடி வந்தனர். மேலும் அந்த பெண் அளித்த புகாரி சஜித் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் சனிக்கிழமை(9.11.2024) அன்று சஜித்தை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

police woman
இதையும் படியுங்கள்
Subscribe