டிக் டாக் மோகத்தால் தலைகீழாக குதித்த இளைஞர் பலி - வைரலாகும் வீடியோ!

சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும், வைரலாக தங்களை பற்றி பேச வேண்டும், அதிக லைக்குகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இளைய தலை முறையினர் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டிக் டாக் வீடியோக்கள் காரணமாக அதிக அளவிலான மரணங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் கூட ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பாடிபாகா பகுதியில் இளைஞர் ஒருவர் அணைக்கட்டில் நின்றுகொண்டு வீடியோ செய்து உயிரிழந்தார்.

அதேபோல மற்றொரு மரணம் தற்போது நிகழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பைக்கின் விளிம்பில் ஏறி நின்றுகொண்டு தலைகீழாக குதிக்கிறார். குதித்த வேகத்தில் கீழே விழுந்த அவரிடம் எந்த அசைவுமில்லை. அருகில் நின்றவர்கள் பதறிப்போய் ஓடிவந்து பார்த்தால் தலையில் அடிபட்டு அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் இதுபோல இன்னும் எத்தனை பேரின் உயிர் போகப்போகிறது? என ஆதங்கப்பட்டு உள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

TikTok
இதையும் படியுங்கள்
Subscribe