சத்தீஸ்கரில் தன்னிடம்பேச மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர், 51 முறை ஸ்க்ரூ ட்ரைவரால்குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாபஷ் கான். இவர்ஜாஸ்பூர்-கோர்பா இடையே பயணிக்கும் ஒரு தனியார் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பேருந்தில் தினந்தோறும் பள்ளிக்குச்செல்லும் நீல்குஷம்(20) என்ற பெண்ணுக்கும்ஷபாஷ் கானுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஷபாஷ் கான் வேலை நிமித்தமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்குசென்றுள்ளார். இருப்பினும்,நீல்குஷமிடம் தொடர்ந்து செல்போனில் பேசி வந்திருக்கிறார்.
இந்த நிலையில்,நீல்குஷம்ஷபாஷ் கானுடன் செல்போனியில்பேசுவதை நிறுத்தியுள்ளார். மேலும், அவரது எண்ணையும்பிளாக் செய்துள்ளாராம். இதனால் ஆத்திரமடைந்த ஷபாஷ் கான் அந்தப் பெண்ணைத்தன்னிடம்பேசுமாறு வற்புறுத்தியதோடு, அவரது பெற்றோரையும் மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ஷபாஷ்கான்,நீல்குஷம்தனியாக இருந்த சமயம் பார்த்து அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் பதறிப்போனநீல்குஷம்கத்தி சத்தம் போட, அவரது வாயைத்தலையணையைக் கொண்டு அழுத்திஸ்க்ரூ ட்ரைவரால்51 முறை குத்திக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளார்.
வெளியே சென்று மலையில் வீடு திரும்பிய நீல்குஷமின்சகோதரர்கள்அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீல்குஷமின்உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பிச் சென்ற ஷபாஷ் கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத்தேடி வருகின்றனர்.