Advertisment

55 லட்சம் கொடுங்கள்... மறுத்தால் உடலில் கட்டியுள்ள வெடிகுண்டை வெடிக்கச் செய்வேன் - வங்கிக்குள் நுழைந்து மிரட்டிய இளைஞர்!

கத

Advertisment

மஹாராஷ்ட்ரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியில் இளைஞர் ஒருவர் நுழைந்து, வாயில் கதவினைப் பூட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் அவரிடம் விசாரிக்க முயன்ற நிலையில், தன் உடலில் வெடிகுண்டைக் கட்டி வைத்துள்ளதாகவும், உடனடியாக 55 லட்சம் பணம் தரவில்லை என்றால் வெடிக்க செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவருக்குத் தெரியாமல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவலர்கள், மிரட்டல் விடுத்த இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காக பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்துள்ளது. அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவலர்கள், அவர் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.

Maharashtra bank robbery
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe