
'வேர்வோல்ஃப் சின்ட்ரோம்' என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டடுமுகம் முழுக்க ரோமம் வளர்ந்த இளைஞர்தொடர்பான வீடியோ காட்சிகள், படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசதராட்டலா மாவட்டம்நன்ட்லெட்டலா கிராமத்தைச் சேர்ந்தவர் லலித் பரிதார். 23 வயதுஇளைஞரான இவருக்கு முகம் முழுக்க ரோமங்கள் முளைத்துள்ளது. குரங்குகளுக்கு இருப்பதுபோல் முகம் முழுக்க முடி வளர்ந்து காணப்படுவதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் கேலிக்கு உள்ளாக்கப்படுகிறார். வேர்வோல்ஃப் சின்ட்ரோம் (werewolf syndrome) என்ற வினோத நோயின் காரணமாக இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நோயிற்குநிரந்தர தீர்வு கிடையாதாம். அவ்வப்போது சேவ் செய்து கொள்ளலாம் அல்லது ரோமத்தை நீக்குவதற்கு பயன்படுத்தும் ஜெல் போன்றவற்றை பயன்படுத்தி ரோமத்தை நீக்கிக் கொள்ளலாம். உலகம் முழுக்க இந்த வினோத நோயால் கிட்டத்தட்ட 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  
 Follow Us