Advertisment

மதுவில் தள்ளாடிய இளம்பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதம்

young girls

மும்பை மிரா சாலையில் உள்ள மதுபான விடுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை காலை கால்சென்டரில் பணியாற்றும் 4 பெண்கள் சென்றனர். மது அருந்திவிட்டு மதியம் 1.30 மணி அளவில் வெளியே வந்துள்ளனர். வெளியே வந்த அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்ததோடு அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இவர்கள் ஒருவருக்கொருவர் போதையில் சண்டைப்போட்டுக்கொண்டது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரையும் சமாதானம் செய்ய சென்றுள்ளனர். ஆனால் போலீசாரை அவர்கள் தாக்க முயன்றதால், பெண் போலீசார் உதவியுடன் அவர்களை வேனில் ஏற்ற போலீசார் முயன்றனர். அப்போது ஒருவர் தப்பியோடிவிட்டார்.

Advertisment

அவர்களைபெண் காவலரால்கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் குடிபோதையில் இருந்த பெண்களை சரமாறியாக தாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றினார். கைது செய்யப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Mumbai girls young
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe